அருள்மிகு ஸ்ரீ அழகிய அம்மன் திருக்கோவிலானது பக்தர்களின் அருட்கொடையோடு தைத்திங்கள் 12 ஆம் நாள் 26.01.2004 ல் முதல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகள் நிறைவுப்பெற்று இரண்டாவது அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆவணி மாதம் 14ஆம் நாள் 30.08.2018 ல் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் 16அடி உயரம் உள்ள மிக பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டு பூசைகள் செய்யப்பட்டு வருகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த அழகிய அம்மன் பலரின் குலதெய்வமாகவும் , அனைவரின் இஷ்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார்...
ஆலயத்தின் அர்ச்சகராக சிவத்திரு K.ஆனந்தன் ஐயர் அவர்கள் மிகவும் சிறந்த முறையில் தொண்டாற்றி வருகிறார்.
அழகிய அம்மனை சாந்த ஸ்வரூபியாக அழகிய முறையில் அமைத்து தந்தவர் ஸ்தபதி திரு A.பரமசிவம் அவர்கள்.
அருள்மிகு அழகியம்மன் திருக்கோவில் அருகாமையில், அன்னதான மண்டபம் குளியலறை மற்றும் கழிவறை கட்ட இருப்பதால் இறையன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் நன்கொடை அளித்து உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
Gpay : 9940853303
இறை அன்பர்கள் கோவில் பூஜைக்கு தேவைப்படும் விளக்கு எண்ணெய், கற்பூரம் , ஊதுபத்தி போன்ற பூஜை பொருட்களை கொடுக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திர கத்திரி பூஜை விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் . அன்பர்கள் அன்னதானத்திற்கு தேவைப்படும் அரிசி முதலிய பொருட்களை நன்கொடையாகவும் அளிக்கலாம்.
அம்மனின் அற்புதங்கள்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த அழகியம்மன் தன்னை நாடி வேண்டி வரும் அனைத்து பக்தர்களுக்கும் பல சிறப்புகளை செய்து அவர்களுடைய கஷ்டத்தை நீக்கி வாழ்வில் உயர்வடைய செய்துள்ளார். பக்தர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.
வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து , பக்தர்கள் மொட்டை அடிப்பது சிறந்த நேர்த்திக்கடன் ஆக உள்ளது.
பக்தர்கள் நம்பிக்கையுடன் விளக்கு ஏற்றி அழகிய அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பம் இன்றி இன்பமாக வாழலாம்..வேண்டிய வரத்தை தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பவள்.
என்றும் அம்மன் அருட்பணியில் , அழகிய அம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள்.
ஸ்ரீ அழகிய அம்மன் கோவில்
மாதகடுப்பு ரோடு,
சான்றோர் குப்பம் ,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ,
தமிழ்நாடு 635814
தொடர்புக்கு :
S.பாபு 9940853303
Sri azhagiya amman temple
Mathakaduppu road ,
Sandrorkuppam,
Ambur ,
Tirupattur dist,
Tamilnadu - 635 814
Contact :
S.Babu
9940853303